< Back
மாநில செய்திகள்
நண்பர் இறந்த சோகத்தில் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை
திருவள்ளூர்
மாநில செய்திகள்

நண்பர் இறந்த சோகத்தில் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை

தினத்தந்தி
|
9 Sept 2022 3:09 PM IST

நண்பர் இறந்த சோகத்தில் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

திருவள்ளூரை அடுத்த வெள்ளவேடு அருகே உள்ள திருமழிசை பிரயாம்பத்து ஜவஹர் தெருவை சேர்ந்தவர் மனோகரன் (வயது 27). இவரது நண்பர் ஒருவர் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு இறந்து போனார்.

இதன் காரணமாக அவர் தனது உயிர் நண்பர் தன்னை விட்டு பிரிந்து விட்டாரே என்ற ஏக்கத்தில் மிகவும் மன உளைச்சல் அடைந்து வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்து வந்தார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் வீட்டில் இருந்த மனோகரன் நண்பர் இறந்த துக்கம் தாங்க முடியாமல் தன்னுடைய அறைக்கு சென்று அங்கு மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இது குறித்து வெள்ளவேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து மனோகரனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்