தென்காசி
மதுவில் விஷம் கலந்து குடித்து வாலிபர் தற்கொலை
|ஆலங்குளம் அருகே மதுவில் விஷம் கலந்து குடித்து வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.
ஆலங்குளம்:
ஆலங்குளம் அருகே குருவன்கோட்டை மேல ெதருவை சேர்ந்தவர் சேர்மராஜ் மகன் சைமன் ராஜ் (வயது 33). இவருடைய மனைவி ரெபேக்காள். இருவரும் கடந்த 2 வருடமாக தனியார் பீடி கம்பெனியில் வேலை பார்த்து வந்தனர். இருவரும் அடிக்கடி விடுப்பு எடுத்து வந்ததால் பீடி நிர்வாகம் இருவரையும் வேலையில் இருந்து நீக்கியது. அதன் பின்பு வேலையில்லாமல் கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இந்தநிலையில் அங்கு மீண்டும் வேலைக்கு சேருவதற்காக நெல்லைக்கு நேற்று முன்தினம் சென்றார். அதற்கு அங்குள்ள மேலாளர் தற்போது வேறு மாநிலத்தில் தான் வேலை உள்ளதாகவும், அங்கு குடும்பத்துடன் சென்றால் வேலை தருவதாகவும் கூறியுள்ளார். இதனால் மன வருத்தத்தில் காணப்பட்ட சைமன் ராஜ் மனைவியுடன் சண்டை போட்டுவிட்டு வீட்டை விட்டு வெளியேறினார்.
2 நாட்களாக கணவர் வீடு திரும்பததால் மனைவி ரெபேக்காள் சைமன்ராஜை தேடி அலைந்துள்ளார். இந்தநிலையில் ஆலங்குளத்தில் உள்ள தனியார் பள்ளி அருகே அமைந்துள்ள டாஸ்மாக் அருகே அடையாளம் தெரியாத நபர் 2 நாட்களாக படுத்து கிடப்பதாக கிடைத்த தகவலின் பேரில் ஆலங்குளம் போலீசார் சென்று பார்த்தனர். அங்கு அவரை சோதனை செய்து பார்த்ததில் மதுவில் விஷம் அருந்தி தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது. மேலும் தற்கொலை செய்துகொண்ட அவர் சைமன்ராஜ் என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரது உடலை கைப்பற்றி பரிசோதனைக்காக நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.