கன்னியாகுமரி
வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை
|வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை
கொல்லங்கோடு:
கொல்லங்கோடு அருகே உள்ள சூழால் நெய்தவிளையை சேர்ந்தவர் விசுவம்பரன், தொழிலாளி. இவருடைய மகன் அரவிந்த் (வயது26). இவர் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் நுரையீரல் நோயால் பாதிக்கப்பட்டு நெய்யாற்றின்கரையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்ததாகவும், அதன்பிறகு சற்று மனநிலை பாதிக்கப்பட்ட நிலையில் இருந்ததாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் அரவிந்தின் பெற்றோர் உச்சக்கடையில் உள்ள ஒரு மருந்து கடைக்கு சென்றனர். சிறிது நேரம் கடந்து அவர்கள் திரும்பி வந்த போது அரவிந்த் அறையில் தூக்கில் தொங்குவதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். உடனே அவரை மீட்டு குழித்துறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். அவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்ததாக தெரிகிறது. இதுகுறித்த புகாரின் பேரில் கொல்லங்கோடு போலீசார் வழக்குப்பதிவு செய்து தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.