< Back
மாநில செய்திகள்
கன்னியாகுமரி
மாநில செய்திகள்
வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை
|10 Feb 2023 2:44 AM IST
வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை
கருங்கல்:
கருங்கல் அருகே உள்ள தொழிச்சல் காஞ்சிரவிளை பகுதியை சேர்ந்தவர் சந்தோஷ்குமார் (வயது 25), தொழிலாளி. இவருக்கு திருமணம் ஆகவில்லை. சம்பவத்தன்று சந்தோஷ் குமார் தனது அறையில் தூங்க சென்றவர் காலையில் வெகு நேரமாகியும் எழுந்து வரவில்லை. இதனால் வீட்டில் இருந்தவர்கள் அவரது அறைக்கு சென்று பார்த்தபோது, அங்கு அவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது.
இதுகுறித்து கருங்கல் போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். அப்போது வேலைக்கு சந்தோஷ்குமார் செல்லாததை தாயார் கண்டித்ததால் தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது.