< Back
மாநில செய்திகள்
விருத்தாசலம் அருகேவாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை
கடலூர்
மாநில செய்திகள்

விருத்தாசலம் அருகேவாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை

தினத்தந்தி
|
23 Jan 2023 1:57 AM IST

விருத்தாசலம் அருகே வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.


விருத்தாசலம்,

விருத்தாசலம் அடுத்த கோ.பவழங்குடி கிராமத்தைசேர்ந்தவர் பாலு. இவரது மகன் அய்யனார் (19). இவர் நேற்று முன்தினம் தனது வீட்டில் திடீரென தூக்குப்போட்டு கொண்டார். இதைபார்த்து அதிர்ச்சி அடைந்த உறவினர்கள், அவரை மீட்டு சிகிச்சைக்காக உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், அய்யனார் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்த புகாரின் பேரில் மங்கலம்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து அய்யனார் எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என்பது பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்