கன்னியாகுமரி
வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை
|அஞ்சுகிராமம் அருகே மது குடித்ததை தாயார் கண்டித்ததால் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
அஞ்சுகிராமம்,
அஞ்சுகிராமம் அருகே மது குடித்ததை தாயார் கண்டித்ததால் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
மது பழக்கம்
அஞ்சுகிராமம் போலீஸ் சரகம் புன்னார்குளத்தைச் சேர்ந்தவர் மணி. இவரது மகன் சுதன் (வயது24). இவர் 12-ம் வகுப்பு படித்து விட்டு திருமூல நகரில் ஒரு துணிக்கடையில் வேலை பார்த்து வந்தார். இவருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்ததாக தெரிகிறது. மேலும், சரியாக வேலைக்கு செல்லாமல் இருந்ததாக கூறப்படுகிறது.
சம்பவத்தன்று சுதன் மது போதையில் வீட்டுக்கு வந்தார். அவரை தாயார் செல்வராணி கண்டித்தார். இதனால் சுதன் மனமுடைந்து காணப்பட்டார்.
தூக்குப்போட்டு தற்கொலை
இந்த நிலையில் இரவு சுதன் தாயாரின் சேலையில் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்தார். இதை பார்த்த உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து அஞ்சுகிராமம் போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார், சுதனின் உடலை கைப்பற்றி ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து அஞ்சுகிராமம் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் கதிரேசன், சுசீந்திரம் இன்ஸ்பெக்டர் சாய் லட்சுமி ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.