< Back
மாநில செய்திகள்
கன்னியாகுமரி
மாநில செய்திகள்
அஞ்சுகிராமம் அருகே வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை
|13 Dec 2022 2:13 AM IST
அஞ்சுகிராமம் அருகே வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
அஞ்சுகிராமம்:
அஞ்சுகிராமம் அருகே ஆதலவிளையை சேர்ந்தவர் அனீஸ் (வயது 21). டிப்ளமோ முடித்த இவர் வேலை தேடி வந்தார். இதற்கிடையே கூலி வேலைக்கு சென்று வந்தார்.
மேலும் இவர் வயிற்றுவலியால் அவதிப்பட்டதாக தெரிகிறது. பின்னர் சாமிதோப்புக்கு செல்ல மாலை அணிந்து விரதம் இருந்தார். இந்தநிலையில் சம்பவத்தன்று அந்த பகுதியில் மலையடிவாரத்தில் உள்ள ஒரு ஆலமரத்தில் அனீஸ் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுபற்றி தகவல் அறிந்த அஞ்சுகிராமம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜெசி மேனகா மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து தற்கொலைக்கான காரணம்? குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.