< Back
மாநில செய்திகள்
தந்தை படுத்த படுக்கையாக இருந்ததால் மனம் உடைந்த  வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை
சேலம்
மாநில செய்திகள்

தந்தை படுத்த படுக்கையாக இருந்ததால் மனம் உடைந்த வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை

தினத்தந்தி
|
3 Nov 2022 2:02 AM IST

தந்தை படுத்த படுக்கையாக இருந்ததால் மனம் உடைந்த வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தேவூர்,

பெரம்பலூர் மாவட்டம் மேட்டுப்பாளையம் வடக்கு வேப்பந்தட்டை சாத்தன்வாடி பகுதியை சேர்ந்தவர் தங்கவேல். இவருடைய மகன் சரவணன் (வயது 26). இவர் சேலம் மாவட்டம் தேவூர் அருகே வேலம்மா வலசு பகுதியில் லாரி புக்கிங் அலுவலகத்தில் மேலாளராக பணிபுரிந்து வந்தார். அவர் கத்தேரி பகுதியில் உள்ள ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து தங்கி இருந்தார். இந்த நிலையில் கடந்த மாதம் தீபாவளி பண்டிகைக்காக சொந்த ஊருக்கு சென்று விட்டு மீண்டும் நேற்று முன்தினம் அவர் அலுவலகத்திற்கு வந்தார். அங்கு வேலை முடிந்து இரவு கத்தேரி பகுதியில் அவர் தங்கியிருந்த அறைக்கு ெசன்றவர் தூக்குப்போட்டு தற்கொைல செய்து கொண்டார். சம்பவம் குறித்து நேற்று காலை தகவல் கிடைத்ததும், தேவூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சரவணனின் உடலை கைப்பற்றி பிரேதபரிசோதனைக்காக குமாரபாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் சரவணன் எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என்று விசாரணை நடத்தினர். சரவணனின் தாயார் கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு இறந்து விட்டார். சாத்தன்வாடியில் உள்ள அண்ணன் வீட்டில் தந்தை உடல்நலம் பாதிக்கப்பட்டு இருந்தார். இந்த நிலையில் தீபாவளி பண்டிகைக்கு சொந்த ஊருக்கு சென்ற சரவணன், தாயார் இல்லாத நிலையில் தந்தையும் படுத்த படுக்கையாக உடல்நலம் பாதிக்கப்பட்டு இருந்ததால் மனம் உடைந்து காணப்பட்டு உள்ளார். இதனால் அவர் தற்கொலை செய்து கொண்டு இருக்கலாம் என்று அவரது உறவினர்களிடம் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது. இது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்