< Back
மாநில செய்திகள்
வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை
கன்னியாகுமரி
மாநில செய்திகள்

வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை

தினத்தந்தி
|
2 Nov 2022 12:15 AM IST

மார்த்தாண்டத்தில் தொழிலில் போதிய வருமானம் கிடைக்காததால் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

குழித்துறை:

மார்த்தாண்டத்தில் தொழிலில் போதிய வருமானம் கிடைக்காததால் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

பேட்டரி கடை

மார்த்தாண்டம் கீழ் பம்மம் கொற்றவிளையை சேர்ந்தவர் நாகராஜன் (வயது 58). இவர் அந்த பகுதியில் பேட்டரி பழுது பார்க்கும் ஒர்க் ஷாப் நடத்தி வருகிறார். இவருக்கு மனைவியும் ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். மகளுக்கு ஏற்கனவே திருமணம் ஆகிவிட்டது.

இவருடைய மகன் ரெஜின் (29) தந்தையுடன் சேர்ந்து அதே ஒர்க் ஷாப்பை நடத்தி வந்தார். ஆனால், அந்த ஒர்க் ஷாப்பில் சரியாக ெதாழில் நடைபெறவில்லை. இதனால், போதுமான வருமானம் கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால், தொழில் சரியாக அமையவில்லையே என மனமுடைந்த ரெஜின் மது குடிக்கும் பழக்கத்துக்கு அடிமையானார்.

தூக்குப்போட்டு தற்கொலை

சம்பவத்தன்று இரவு அவர் வீட்டின் மாடியில் உள்ள அறையில் தூங்கச் சென்றார். மறுநாள் வெகுநேரம் ஆகியும் ரெஜின் எழுந்து கீழே வரவில்லை. இதனால் சந்தேகப்பட்ட நாகராஜன் மாடி அறைக்கு சென்று பார்த்தார். அப்போது, அங்கு ரெஜின் தூக்கில் பிணமாக தொங்குவதை கண்டு கதறி அழுதார். தொழிலில் போதுமான வருமானம் கிடைக்காதால் மனமுடைந்த நிலையில் காணப்பட்ட ெரஜின் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

போலீஸ் விசாரணை

இதுகுறித்து நாகராஜன் மார்த்தாண்டம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் விரைந்து சென்று ரெஜினின் பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குழித்துறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து இன்ஸ்பெக்டர் செந்தில்வேல் குமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

தொழிலில் போதிய வருமானம் இல்லாததால் வாலிபர் தற்கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்