< Back
மாநில செய்திகள்
வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை
திருநெல்வேலி
மாநில செய்திகள்

வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை

தினத்தந்தி
|
4 Aug 2022 2:41 AM IST

மானூர் அருகே வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்

மானூர்:

மானூர் அருகே உள்ள இரண்டும் சொல்லான் கிராமத்தை சேர்ந்தவர், ஜோசப் மகன் சவுந்தர்ராஜ் (வயது 31). இவர் நீண்ட நாட்களாக தலைவலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதனால் மனமுடைந்த சவுந்தர்ராஜ், வீட்டில் உள்ள ஒரு அறையில் மின்விசிறி கம்பியில் நைலான் கயிற்றால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்ததும் மானூர் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்றனர். சவுந்தர்ராஜ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

மேலும் செய்திகள்