< Back
மாநில செய்திகள்
கடலூர்
மாநில செய்திகள்
சேத்தியாத்தோப்பு அருகே வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை
|31 July 2022 10:06 PM IST
சேத்தியாத்தோப்பு அருகே வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
சேத்தியாத்தோப்பு,
சேத்தியாத்தோப்பு தெற்கு மெயின் ரோட்டில் வசிப்பவர் தமிழரசன். இவருடைய மகன் கார்த்திக் (வயது 24). என்ஜினீயரிங் படித்துவிட்டு இவர் கடந்த 4 மாதமாக வேலையின்றி வீட்டில் இருந்து வந்தார். இதனால் குடும்பத்தில் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த கார்த்திக் சின்னகுப்பத்தில் உள்ள நண்பர் வீட்டில் தங்கி வசித்து வந்தார். சம்பவத்தன்று வாழ்க்கையில் விரக்தியடைந்த கார்த்திக் நண்பருக்கு சொந்தமான மோட்டார் கொட்டகையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தமிழரசன் கொடுத்த புகாரின்பேரில் சேத்தியாத்தோப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.