< Back
மாநில செய்திகள்
வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை
திருவள்ளூர்
மாநில செய்திகள்

வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை

தினத்தந்தி
|
17 July 2022 7:24 AM GMT

ஆவடி அருகே வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

ஆவடியை அடுத்த அண்ணனூர் பொன்னியம்மன் கோவில் தெருவில் வசித்து வந்தவர் மோகன் (வயது 24). ஐ.டி.ஐ. படித்துள்ள இவர், தனது பெரியம்மா தீனாள் வீட்டில் தங்கி, ஆவடி அருகே கோனாம்பேடு நாராயணபுரம் பகுதியில் ஒரு வெல்டிங் கடையில் வேலை செய்து வந்தார். நேற்று முன்தினம் இரவு மோகன், தனது அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றி திருமுல்லைவாயல் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரது தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்