< Back
மாநில செய்திகள்
விக்கிரவாண்டி அருகே     வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை;காரணம் என்ன? போலீசார் விசாரணை
விழுப்புரம்
மாநில செய்திகள்

விக்கிரவாண்டி அருகே வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை;காரணம் என்ன? போலீசார் விசாரணை

தினத்தந்தி
|
22 Sept 2023 12:15 AM IST

விக்கிரவாண்டி அருகே வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவர் சாவுக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

விக்கிரவாண்டி,

விக்கிரவாண்டி அருகே உள்ள ஆர்.சி.மேலக்கொந்தை கிராமத்தை சேர்ந்தவர் ஏழுமலை மகன் அனில்குமார் (வயது 21). இவர் போலீஸ் தேர்வுக்கு படித்து வந்தார். இந்த நிலையில் அனில்குமார் நேற்று முன்தினம் மாலை நடந்த விநாயகர் சிலை ஊர்வலத்தில் கலந்து கொண்டதுடன், வீடூர் அணையில் சிலையை கரைத்து விட்டு இரவு 11 மணியளவில் வீடு திரும்பினார். அதன்பிறகு அவர் சாப்பிட்டு விட்டு வீட்டில் உள்ள மேல்மாடிக்கு படுக்க சென்றார். இந்த நிலையில் பக்கத்து வீட்டை சேர்ந்த நபர் ஒருவா் நள்ளிரவு 1 மணியளவில் சிறுநீர் கழிப்பதற்காக வீட்டை விட்டு வெளியே வந்தார். அப்போது அனில்குமார் வீட்டின் எதிரே உள்ள தேக்கு மரத்தில் தூக்குப்போட்ட நிலையில் தொங்கிக் கொண்டிருந்தார். இதைபார்த்து பதறிய பக்கத்து வீட்டுக்காரர் அனில்குமாரின் பெற்றோர் மற்றும் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் அனில்குமாரை மீட்டு சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தார். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர் அனில்குமார் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினார். இதுகுறித்து ஏழுமலை கொடுத்த புகாரின் பேரில் விக்கிரவாண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து அனில் குமார் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்