< Back
மாநில செய்திகள்
கன்னியாகுமரி
மாநில செய்திகள்
வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை
|24 July 2023 2:54 AM IST
வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை
ராஜாக்கமங்கலம்:
ராஜாக்கமங்கலம் அருகே உள்ள ராஜாக்கமங்கலம்துறை பகுதியை சேர்ந்தவர் ஜார்ஜ். இவருடைய மகன் ரெஸ்லின் (வயது 24). இவர் கடந்த நான்கு ஆண்டுகளாக மனநலம் பாதிக்கப்பட்டு இருந்ததால் நாகர்கோவில் அருகே உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார்.
இந்தநிலையில் நேற்று முன்தினம் வீட்டில் தனியாக இருந்த ரெஸ்லின் திடீரென தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றி ராஜாக்கமங்கலம் போலீசாருக்கு தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று ெரஸ்லினின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து ராஜாக்கமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.