< Back
மாநில செய்திகள்
ஒரு தலை காதலால் வாலிபர் விஷம் குடித்து தற்கொலை
செங்கல்பட்டு
மாநில செய்திகள்

ஒரு தலை காதலால் வாலிபர் விஷம் குடித்து தற்கொலை

தினத்தந்தி
|
14 Sept 2023 2:16 PM IST

ஒரு தலை காதலால் இளம்பெண்ணை கத்தியால் குத்த முயன்ற வாலிபர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். தடுக்க முயன்ற அந்தபெண்ணின் பெரியம்மாவுக்கு கத்திக்குத்து விழுந்தது.

ஒருதலை காதல்

செங்கல்பட்டு மாவட்டம் திருவாதூரை சேர்ந்தவர் கார்த்திக் (வயது 26). தனியார் பைனான்ஸ் கம்பெனியில் வேலை செய்து வந்தார். அதே நிறுவனத்தில் 26 வயது பெண் வேலை செய்து வந்தார். அந்த பெண்ணை கார்த்திக் ஒருதலை பட்சமாக காதலித்து வந்ததாக தெரிகிறது. அந்த பெண்ணுக்கு வேறு இடத்தில் மாப்பிள்ளை பார்த்தனர்.

இதையடுத்து கார்த்திக் நேற்று அந்த பெண்ணின் வீட்டுக்கு சென்று அவருடன் தகராறில் ஈடுபட்டார். பேச்சுவார்த்தை முற்றி தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் அந்த பெண்ணை குத்த முயன்றார். அதை அந்த பெண்ணின் பெரியம்மா தடுக்க முயன்றார். இதில் அவருக்கு கத்திக்குத்து விழுந்தது.

சாவு

இதையடுத்து அவர் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். கார்த்திக் காதல் தோல்வியால் விஷம் குடித்தார். இதையடுத்து அவரும் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

இது குறித்து செய்யூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்