நீலகிரி
விஷம் குடித்து வாலிபர் தற்கொலை
|குடும்ப பிரச்சினையால் விஷம் குடித்து வாலிபர் தற்கொலை செய்துகொண்டார்.
கூடலூர்
கூடலூரில் உள்ள தங்கும் விடுதியில் வாலிபர் ஒருவர் கடந்த 6-ந் தேதி அறை எடுத்து தங்கி இருந்த நிலையில், விஷம் குடித்து மயங்கி கிடந்தார். தொடர்ந்து கூடலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் அருள் தலைமையிலான போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். அப்போது ஊட்டி பிங்கர்போஸ்ட் பகுதியை சேர்ந்த ராஜ்குமார் என்பவரது மகன் அருண்குமார் (வயது 27) என்பது தெரியவந்தது. மேலும் குடும்ப பிரச்சினை காரணமாக விஷம் குடித்ததாக கூறப்படுகிறது. பின்னர் அருண்குமாரை கூடலூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், நேற்று முன்தினம் சிகிச்சை பலனின்றி அருண்குமார் இறந்தார். இதுகுறித்து கூடலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தற்கொலை செய்த அருண்குமாரின் தந்தை ஊட்டியில் உள்ள மாவட்ட வருவாய் அலுவலர் முகாம் அலுவலகத்தில் சமையல்காரராக பணியாற்றி வருகிறார்.