< Back
மாநில செய்திகள்
தேனி
மாநில செய்திகள்
விஷம் குடித்து வாலிபர் தற்கொலை
|9 May 2023 12:30 AM IST
போடியில் விஷம் குடித்து வாலிபர் தற்கொலை செய்து ெகாண்டார்.
போடி டி.வி.கே.கே. நகர் 9-வது தெருவை சேர்ந்தவர் மாரிமுத்து. இவரது மகன் நவநீதன் (வயது 20). இவர் கடந்த ஒரு ஆண்டாக வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார். இதனால் அவர் மனமுடைந்து காணப்பட்டார். இந்நிலையில் நேற்று முன்தினம் வீட்டில் இருந்து வெளியே சென்ற நவநீதன் விஷம் குடித்தார். பின்னர் வீட்டுக்கு வந்த அவர் மயங்கி விழுந்தார். உடனே அவரை மீட்டு சிகிச்சைக்காக போடி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு இருந்து மேல்சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று நவநீதன் உயிரிழந்தார். இதுகுறித்து போடி நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.