< Back
மாநில செய்திகள்
விஷம் குடித்து வாலிபர் தற்கொலை
கோயம்புத்தூர்
மாநில செய்திகள்

விஷம் குடித்து வாலிபர் தற்கொலை

தினத்தந்தி
|
9 Jan 2023 12:15 AM IST

விஷம் குடித்து வாலிபர் தற்கொலை

பொள்ளாச்சி

கோவை அருகே உள்ள மேற்கு குருடம்பாளையத்தை சேர்ந்தவர் விவின்(வயது 26). இவர் கடந்த சில நாட்களாக பொள்ளாச்சியில் உள்ள ஒரு விடுதியில் தங்கியிருந்தார். சம்பவத்தன்று விவின் தங்கியிருந்த அறை திறக்கப்படாமல் கிடந்தது. இதனால் சந்தேகம் அடைந்த மேலாளர், அறை கதவை உடைத்து உள்ளே சென்றார். அப்போது விவின் விஷம் குடித்து தற்கொலை செய்திருப்பது தெரியவந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த பொள்ளாச்சி மேற்கு போலீசார் விரைந்து வந்து, பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்