< Back
மாநில செய்திகள்
நாகப்பட்டினம்
மாநில செய்திகள்
விஷம் குடித்து வாலிபர் தற்கொலை
|3 Jan 2023 12:15 AM IST
வேதாரண்யம் அருகே விஷம் குடித்து வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.
வேதாரண்யம்:
வேதாரண்யத்தை அடுத்த செட்டிப்புலம் கிராமத்தைச் சோ்ந்தவர் முருகவேல் (வயது33). இவர் நீண்ட நாட்களாக வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்ததாக தெரிகிறது. சம்பவத்தன்று வயிற்று வலி தாங்க முடியாமல் முருகவேல் வீட்டில் வயலுக்கு தெளிக்க வைத்திருந்த பூச்சி மருந்தை(விஷம்) எடுத்து குடித்து விட்டு மயங்கி விழுந்தார். உடனே அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக கரியாப்பட்டினம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக அவரை திருத்துறைப்பூண்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி முருகவேல் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் கரியாப்பட்டினம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.