< Back
மாநில செய்திகள்
வாலிபர் விஷம் குடித்து தற்கொலை
கன்னியாகுமரி
மாநில செய்திகள்

வாலிபர் விஷம் குடித்து தற்கொலை

தினத்தந்தி
|
28 Dec 2022 12:15 AM IST

ஆரல்வாய்மொழி அருகே வேலைக்கு செல்லாததை பெற்றோர் கண்டித்ததால் வாலிபர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

ஆரல்வாய்மொழி:

ஆரல்வாய்மொழி அருகே வேலைக்கு செல்லாததை பெற்றோர் கண்டித்ததால் வாலிபர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

வாலிபர்

ஆரல்வாய்மொழி அருகே உள்ள தாழக்குடி மேல காலனி பனையடி தெருவை சேர்ந்தவர் ஆபிரகாம். இவருக்கு சொர்ணலதா என்ற மனைவியும், 2 மகன்களும், ஒரு மகளும் உண்டு. இதில் மூத்த மகன் முகேஷ்(வயது24) தொழிலாளி.

முகேஷ் சரியாக வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்து வந்தாக கூறப்படுகிறது. இதை பெற்றோர் கண்டித்து வந்தனர்.

தற்கொலை

சம்பவத்தன்றும் வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்த முகேசை பெற்றோர் கண்டித்துள்ளனர். இதனால் மனமுடைந்த முகேஷ் திடீரென விஷம் குடித்து விட்டு வீட்டில் மயங்கி கிடந்தார்.

இதைகண்டு அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர், அக்கம் பக்கத்தினர் உதவியுடன் அவரை மீட்டு ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி முகேஷ் நேற்று அதிகாலையில் பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்த புகாரின் பேரில் ஆரல்வாய்மொழி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

வேலைக்கு செல்லாததை பெற்றோர் கண்டித்ததால் வாலிபர் விஷம் குடித்து தற்கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்