< Back
மாநில செய்திகள்
கன்னியாகுமரி
மாநில செய்திகள்
கருங்கல் அருகே வாலிபர் விஷம் குடித்து தற்கொலை
|26 Dec 2022 12:08 AM IST
கருங்கல் அருகே வாலிபர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
கருங்கல்:
கருங்கல் அருகே கம்பிளார் பொதுவன் விளைப்பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ். இவருடைய மகன் ஸ்டெலின் ஜோஸ் (வயது 36). இவர் ஒலிபெருக்கி வைத்து தொழில் செய்து வந்தார். இவருக்கு திருமணம் ஆகவில்லை. மேலும் தொழிலிலும் நஷ்டம் ஏற்பட்டதால் குடிப்பழக்கத்திற்கு அடிமையானதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் சம்பவத்தன்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் ஸ்டெலின் ஜோஸ் விஷம் குடித்தார். இதனால் மயக்கமடைந்த அவரை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி ஸ்டெலின் ஜோஸ் பரிதாபமாக இறந்தார்.
இதுபற்றி கருங்கல் போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.