கன்னியாகுமரி
விஷம் குடித்து வாலிபர் தற்கொலை
|விஷம் குடித்து வாலிபர் தற்கொலை
குலசேகரம்:
குலசேகரம் அருகே உள்ள வெண்டலிக்கோடு புனையன்குழி பகுதியை சேர்ந்தவர் சுந்தரேசன் நாயர். இவருடைய மகன் விஷ்ணு (வயது29). இவருக்கு இன்னும் திருமணமாகவில்லை. விஷ்ணு பெயிண்டிங் வேலை செய்து வந்தார். இவருக்கு கடன் பிரச்சினை இருந்து வந்ததாக கூறப்படுகிறது. சம்பவத்தன்று பகலில் விஷ்ணு தனது அறைக்கு தூங்கச் சென்றனர். ஆனால், வெகுநேரமாகியும் விஷ்ணு அறையை விட்டு வெளியே வரவில்லை. இதனால், சந்தேகமடைந்த அவரது தாயார் அருகில் சென்ற பார்த்தபோது, விஷ்ணு விஷம் குடித்து மயங்கிய நிலையில் கிடந்தார். இதைகண்டு அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் உடனே, அவரை மீட்டு சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் விஷ்ணு பரிதாபமாக இறந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் குலசேகரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.