< Back
மாநில செய்திகள்
கள்ளக்குறிச்சி
மாநில செய்திகள்
விஷம் குடித்து வாலிபர் தற்கொலை
|30 Sept 2022 12:15 AM IST
திருக்கோவிலூர் அருகே விஷம் குடித்து வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.
திருக்கோவிலூர்,
திருக்கோவிலூர் அருகே மணலூர்பேட்டையை சேர்ந்தவர் ஆராய்ச்சிமணி மகன் விக்னேஷ் (வயது 25). இவர் உறவினர் பெண் ஒருவரை தனக்கு திருமணம் செய்து வைக்குமாறு பெற்றோரிடம் கூறியுள்ளார். இதையடுத்து பெற்றோர், விக்னேஷ் கூறிய உறவினரின் வீட்டுக்கு சென்று பெண் கேட்டுள்ளனர். ஆனால் அதற்கு உறவினர்கள் மறுப்பு தெரிவித்ததாக தெரிகிறது. இதில் மனமுடைந்த விக்னேஷ் மதுவில் விஷத்தை கலந்து குடித்து மயங்கி விழுந்தார். இதையடுத்து அவர் சிகிச்சைக்காக மணலூர்பேட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் மேல் சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி விக்னேஷ் பரிதாபமாக இறந்தார். இது குறித்த புகாரின் பேரில் மணலூர்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.