< Back
மாநில செய்திகள்
தஞ்சாவூர்
மாநில செய்திகள்
விஷம் குடித்து வாலிபர் தற்கொலை
|15 Sept 2022 1:52 AM IST
விஷம் குடித்து வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்
வல்லம்
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டை அருகே உள்ள தெத்துவாசல்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் கோவிந்தசாமி. இவரது மகன் ரமேஷ்குமார் (வயது 34). இவர் தஞ்சை அருகே குருங்குளத்தில் உள்ள தோட்டத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று ரமேஷ்குமார் அவர் வேலை பார்த்து வந்த தோட்டத்தில் பூச்சி கொல்லி மருந்தை(விஷம்) குடித்து விட்டு மயங்கி கிடந்தார். அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து அவரது தந்தை கோவிந்தராஜ் கொடுத்த புகாரின்பேரில் வல்லம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.