< Back
மாநில செய்திகள்
ராணிப்பேட்டை
மாநில செய்திகள்
விஷம் குடித்து வாலிபர் தற்கொலை
|23 Sept 2023 11:48 PM IST
நெமிலி அருகே விஷம் குடித்து வாலிபர் தற்கொலை செய்துகொண்டார்.
ராணிப்பேட்டை மாவட்டம், நெமிலியை அடுத்த சயனபுரம் கிராமத்தை சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது மகன் சரத்குமார் (வயது 21). இவருக்கு நீண்ட நாட்களாக உடல்நிலை கோளாறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இதனால் மனவேதனையில் இருந்த அவர் நேற்று முன்தினம் இரவு விவசாயத்திற்கு வைத்திருந்த பூச்சிமருந்தை (விஷம்) எடுத்து குடித்துள்ளார். இதனை கண்ட அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து நெமிலி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சிரஞ்சீவிலு வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.