கள்ளக்குறிச்சி
சின்னசேலம் அருகேவாலிபர் விஷம் குடித்து தற்கொலை
|சின்னசேலம் அருகே வாலிபர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
சின்னசேலம்,
சின்னசேலம் அடுத்த காட்டானந்தல் கிழக்கு காட்டுக்கொட்டாய் பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது 59). இவருக்கு பச்சையம்மாள் என்ற மனைவியும் அர்ச்சனா, அபர்ணா, அமர்ணா என்ற 3 மகள்களும், அறிவரசன் (28) என்ற மகனும் உள்ளனர். 3 மகள்களுக்கும் திருமணம் ஆகிவிட்டது. அறிவரசனுக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை.
இந்த நிலையில் ராஜேந்திரன் தனது மனைவி, மகனுடன் சின்னசேலம் அடுத்த கனியாமூர் காட்டுக்கொட்டாய் பகுதியில் உள்ள இளைய மருமகன் மகேஸ்வரன் வீட்டில் வசித்து வந்தார்.
சம்பவத்தன்று அறிவரசன் மகேஸ்வரனிடம் மது குடிக்க பணம் கேட்டுள்ளார். அதற்கு அவர் பணம் கொடுக்கவில்லை. இதனால் விரக்தியடைந்த அறிவரசன் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்து வீட்டில் இருந்த விஷத்தை எடுத்து குடித்து விட்டார். இதில் மயங்கிய அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று முன்தினம் அறிவரசன் உயிரிழந்து விட்டார். இது குறித்து ராஜேந்திரன் கொடுத்த புகாரின் பேரில் சின்னசேலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.