< Back
மாநில செய்திகள்
விஷம் குடித்து வாலிபர் தற்கொலை
ராணிப்பேட்டை
மாநில செய்திகள்

விஷம் குடித்து வாலிபர் தற்கொலை

தினத்தந்தி
|
12 Aug 2023 11:22 PM IST

தக்கோலம் அருகே விஷம் குடித்து வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.

அரக்கோணம்

தக்கோலத்தை அடுத்த பரமேஸ்வரமங்கலம் பகுதியை சேர்ந்த விஜயகுமார் (வயது 24). திருமணம் ஆகாதவர். தந்தை இல்லாததால் அவரது தாய்க்கு உதவியாக உணவக வேலைகள் செய்து வந்துள்ளார்.

இந்த நிலையில் குடும்ப செலவுக்காக தெரிந்த நபர்களிடம் விஜயகுமார் கடன் வாங்கியுள்ளார். பணம் கொடுத்தவர்கள் திரும்ப கேட்டபோது அதனை கொடுக்க முடியாததால் விரக்தியில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இதனிடையே கடந்த 8-ந் தேதி அன்று விஜயகுமார் பூச்சி மருந்து (விஷம்) குடித்து மயங்கி விழுந்தார். உடனடியாக அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு காஞ்சீபுரம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

பின்னர் மேல்சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று காலை அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து தக்கோலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Related Tags :
மேலும் செய்திகள்