< Back
மாநில செய்திகள்
காதலி பேச மறுத்ததால் வாலிபர் தற்கொலை
மாநில செய்திகள்

காதலி பேச மறுத்ததால் வாலிபர் தற்கொலை

தினத்தந்தி
|
15 Jun 2024 2:48 AM IST

ஒரு மாதமாக காதலி பேசாததால் விரக்தியடைந்த வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

சென்னை,

ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்தவர் டீப்தி ரஞ்சன் (வயது 32). இவர், சென்னையை அடுத்த மேடவாக்கத்தில் கட்டப்படும் அடுக்குமாடி குடியிருப்பில் கடந்த ஒரு வருடமாக அங்கேயே தங்கி, வேலை செய்து வந்தார்.

நேற்று முன்தினம் இரவு டீப்தி ரஞ்சன், தான் தங்கி இருந்த அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றி பள்ளிக்கரணை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். டீப்தி ரஞ்சன், தன்னுடன் தங்கி வேலை செய்த ஒடிசாவை சேர்ந்த பெண்ணை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.

கடந்த ஒரு மாதமாக அந்த பெண் அவருடன் பேச மறுத்ததாக தெரிகிறது. இதனால் ஏற்பட்ட விரக்தியில் டீப்தி ரஞ்சன், தற்கொலை செய்திருப்பது முதல்கட்ட விசாரணையில் தெரியவந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்