< Back
மாநில செய்திகள்
திருமணமான 8 மாதத்தில் வாலிபர் தற்கொலை
கடலூர்
மாநில செய்திகள்

திருமணமான 8 மாதத்தில் வாலிபர் தற்கொலை

தினத்தந்தி
|
7 March 2023 12:15 AM IST

பண்ருட்டி அருகே குழந்தை இல்லாத ஏக்கத்தில் திருமணமான 8 மாதத்தில் வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.

பண்ருட்டி

பண்ருட்டி அருகே உள்ள முத்தாண்டிக்குப்பம் புதுகுளத் தெருவை சேர்ந்தவர் ஜனார்த்தனன் (வயது 21). இவருக்கும் ஆனந்தவல்லி என்பவருக்கும் கடந்த 8 மாதங்களுக்கு முன்பு திருமணம் ஆனது. திருமணமாகி 8 மாதங்கள் ஆகியும் தனது மனைவி கர்ப்பம் ஆகாததால் குழந்தை இல்லாமல் போய்விடுமோ என ஜனார்த்தனன் கடந்த சில நாட்களாக மனமுடைந்த நிலையில் காணப்பட்டுள்ளார்.

இந்த நிலையில் முத்தாண்டிக்குப்பம் கிழக்கு தெருவில் உள்ள செந்தாமரை என்பவருக்கு சொந்தமான முந்திரி தோப்பில் இருந்த மரத்தில் ஜனார்த்தனன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்த புகாரின் பேரில் முத்தாண்டிக்குப்பம் போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) ராஜதாமரை பாண்டியன், குழந்தை இல்லாத ஏக்கத்தில் தான் ஜனார்த்தனன் தற்கொலை செய்து கொண்டாரா?, அல்லது வேறு ஏதேனும் காரணம் உண்டா? என விசாரணை நடத்தி வருகிறார்.

மேலும் செய்திகள்