< Back
மாநில செய்திகள்
ராணிப்பேட்டை
மாநில செய்திகள்
வாலிபர் போக்சோவில் கைது
|9 Sept 2022 11:32 PM IST
மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபர் போக்சோவில் கைது செய்யப்பட்டார்.
அரக்கோணத்தை அடுத்த வேடல் பகுதியை சேர்ந்தவர் அஜித் குமார் (வயது 23). கூலி வேலை செய்து வருகிறார். இவர் நெமிலி தாலுகா பகுதியை சேர்ந்த பிளஸ்-2 படிக்கும் 17 வயது மாணவியை கடந்து சில ஆண்டுகளாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இதை அறிந்த மாணவியின் பெற்றோர், அஜித்குமாருடன் பேசுவரை தவிர்க்க சொன்னதால் அஜீத் குமாருடன் பேசுவதை மாணவி தவிர்த்துள்ளர்.
அஜித் குமாருக்கு அவரது குடும்பத்தினர் வேறு பெண்னை திருமணம் செய்து வைத்துள்ளதாக கூறப்படுகிறது. இந்தநிலையில் மாணவியிடம், அஜித்குமார் பாலியல் தொல்லை கொடுத்ததாக மாணவியின் தாய் அரக்கோணம் அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வரலட்சுமி விசாரனை மேற்கொண்டு போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து அஜீத் குமாரை கைது செய்து சிறையில் அடைத்தார்.