கோயம்புத்தூர்
வாலிபர் போக்சோவில் கைது
|பொள்ளாச்சி அருகே சிறுமியை திருமணம் செய்த வாலிபர் போக்சோவில் கைது செய்யப்பட்டார்.
பொள்ளாச்சி
பொள்ளாச்சி அருகே சிறுமியை திருமணம் செய்த வாலிபர் போக்சோவில் கைது செய்யப்பட்டார்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
17 வயது சிறுமி
பொள்ளாச்சி அருகே உள்ள நெகமம் பகுதியை சேர்ந்தவர் 17 வயது சிறுமி. இந்த சிறுமி கடந்த சில நாட்களுக்கு முன்பு வீட்டில் இருந்து திடீரென மாயமானார். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் நெகமம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில், அந்த சிறுமிக்கும், நெகமம் பகுதியில் பழ வியாபாரம் செய்த திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியை சேர்ந்த தொழிலாளியான அரவிந்தன் (வயது 23) என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இதையடுத்து இருவரும் தங்களது செல்போன்களை பரிமாறிக்கொண்டனர். இது நாளடைவில் காதலாக மாறியது.
போக்சோவில் கைது
இதைதொடர்ந்து அரவிந்தன் சிறுமியை ஆசை வார்த்தை கூறி அழைத்து சென்று திருமணம் செய்தது தெரியவந்தது. இந்த நிலையில் பொள்ளாச்சி பஸ் நிலையத்திற்கு சிறுமியுடன் வந்த அரவிந்தனை பொள்ளாச்சி மகளிர் போலீசார் பிடித்து போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்தனர்.
பின்னர் சிறுமியை திருமணம் செய்ததாக அரவிந்தன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, அவரை கைது செய்தனர். மேலும் சிறுமியை மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்தனர்.