< Back
மாநில செய்திகள்
ஆந்திராவில் இருந்து சென்னைக்கு மோட்டார் சைக்கிளில் கஞ்சா கடத்திய வாலிபர் கைது
சென்னை
மாநில செய்திகள்

ஆந்திராவில் இருந்து சென்னைக்கு மோட்டார் சைக்கிளில் கஞ்சா கடத்திய வாலிபர் கைது

தினத்தந்தி
|
6 May 2023 10:49 AM IST

ஆந்திராவில் இருந்து சென்னைக்கு மோட்டார் சைக்கிளில் கஞ்சா கடத்திய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

ஆவடி டேங்க் பேக்டரி போலீஸ் இன்ஸ்பெக்டர் கோபிநாத் தலைமையிலான போலீசார் நேற்று ஆவடி அடுத்த வெள்ளானூர் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு மோட்டார் சைக்கிளை மடக்கி சோதனையிட்டனர்.

அதில் மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்த வெள்ளானூர் பகுதியை சேர்ந்த அகிலன் (வயது 25), ஆந்திராவில் இருந்து 2 கிலோ கஞ்சாவை கடத்தி வந்தது தெரிந்தது. அவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 2 கிலோ கஞ்சா மற்றும் மோட்டார்சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டது.

மேலும் செய்திகள்