< Back
மாநில செய்திகள்
ஆந்திராவில் இருந்து கஞ்சா கடத்திய வாலிபர் கைது
திருவள்ளூர்
மாநில செய்திகள்

ஆந்திராவில் இருந்து கஞ்சா கடத்திய வாலிபர் கைது

தினத்தந்தி
|
5 Feb 2023 6:23 PM IST

ஆந்திராவில் இருந்து ரெயிலில் கஞ்சா கடத்தியவர் கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து 10 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

ரெயிலில் சோதணை

ஆந்திர மாநிலத்திருந்து தமிழகத்திற்கு வரும் ரெயிலில் கஞ்சா கடத்தி வரப்படுவதாக திருவள்ளூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீபாஸ் கல்யாணுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அவரின் உத்தரவின் பேரில் தனிப்படை சப்-இன்ஸ்பெக்டர் குமார் தலைமையிலான போலீசார் திருத்தணி அடுத்த பொன்பாடி ரெயில் நிலையத்தில் நேற்று தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுவந்தனர். அப்போது, ஆந்திராவிலிருந்து பாண்டிச்சேரி நோக்கி வந்துக்கொண்டிருந்த மின்சார ரெயில் நேற்று காலை பொன்பாடி ரெயில் நிலைய நடைமேடைக்கு வந்தடைந்தது. அதில், போலீசார் ஏறி சோதனை செய்தனர்.

10 கிலோ பறிமுதல்

அப்போது ரெயிலில் சந்தேகத்திற்கு இடமாக இருந்த வாலிபரின் உடைமைகளை போலீசார் சோதனை செய்தபோது 10 கிலோ கஞ்சாவை ஆந்திராவில் இருந்து தமிழகத்துக்கு கடத்த முயன்றது தெரியவந்தது. கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் கஞ்சா கடத்தலில் ஈடுபட்ட மதுரை மாவட்டம் ஆராம்பாளையம் கரிமேடு பகுதியைச் சேர்ந்த அஜித் குமார் (வயது 23) என்பவரை கைது செய்தனர்.

மேலும் இதுகுறித்து வழக்கு பதிந்த திருத்தணி போலீசார் கஞ்சா கடத்தலில் ஈடுபட்ட அஜித்குமாரை கேர்ட்டில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

மேலும் செய்திகள்