< Back
மாநில செய்திகள்
ஆந்திராவில் இருந்து ரெயிலில் கஞ்சா கடத்தி வந்த வாலிபர் கைது
சென்னை
மாநில செய்திகள்

ஆந்திராவில் இருந்து ரெயிலில் கஞ்சா கடத்தி வந்த வாலிபர் கைது

தினத்தந்தி
|
17 Oct 2022 12:17 PM IST

ரெயிலில் கஞ்சா கடத்தி வந்த வாலிபரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

சென்னை ஓட்டேரி போலீசார் நேற்று அதிகாலை ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பெரம்பூர் ரெயில் நிலையத்தில் இருந்து இறங்கி வந்த வாலிபரை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் அவரிடம் கஞ்சா இருப்பது தெரிய வந்தது.

அவரை ஓட்டேரி போலீஸ் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை செய்தனர். அதில் அவர், மதுரையைச் சேர்ந்த கல்யாணசுந்தரம் (வயது 26) என்பதும், ஆந்திராவில் இருந்து 6 கிலோ கஞ்சாவை வாங்கி, ரெயிலில் கடத்தி வந்ததும் தெரிந்தது. மேலும் அவர் மீது ஏற்கனவே 10-க்கும் மேற்பட்ட வழக்குகள் இருப்பதும் தெரிந்தது. இதையடுத்து கல்யாண சுந்தரத்தை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

மேலும் செய்திகள்