< Back
மாநில செய்திகள்
கஞ்சா கடத்திய வாலிபர் கைது
கள்ளக்குறிச்சி
மாநில செய்திகள்

கஞ்சா கடத்திய வாலிபர் கைது

தினத்தந்தி
|
13 May 2023 12:15 AM IST

அரகண்டநல்லூர் அருகே கஞ்சா கடத்திய வாலிபர் கைது செய்யப்பட்டாா்.

திருக்கோவிலூர்:

அரகண்டநல்லூர் அருகே கொடுங்கால் கிராமத்தில் வாலிபர் ஒருவர் கஞ்சா விற்பனை செய்வதாக போலீசுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் அரகண்டநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சித்ரா தலைமையிலான போலீசார் அந்த கிராமத்திற்கு சென்று கண்காணித்தனர். மேலும் வாகன சோதனையிலும் ஈடுபட்டனர். அப்போது மோட்டார் சைக்கிளில் வேகமாக வந்த ஒரு வாலிபரை நிறுத்தி சோதனை செய்தனர். அவரிடம் பொட்டலங்கள் இருந்தது. விசாரணையில் அவர், கண்டாச்சிபுரம் தாலுகா கூடலூர் கிராமம் சத்துணவு கூட தெருவை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி மகன் சரவணன்(வயது 29) என்பதும், கஞ்சாவை கடத்தி வந்து விற்பனை செய்ததும் தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்த 200 கிராம் கஞ்சா மற்றும் மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டது.

மேலும் செய்திகள்