< Back
மாநில செய்திகள்
கஞ்சா கடத்திய வாலிபர் கைது
திருவள்ளூர்
மாநில செய்திகள்

கஞ்சா கடத்திய வாலிபர் கைது

தினத்தந்தி
|
8 Feb 2023 12:41 PM IST

திருவள்ளூரில் கஞ்சா கடத்திய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

திருவள்ளூர் மாவட்டம், ஆரணி போலீஸ் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் பாஸ்கர் தலைமையில் போலீசார் அகரம் கூட்டுச்சாலையில் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்பொழுது சந்தேகத்துக்கு இடமான வகையில் அந்த வழியே சென்ற வாலிபரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர். அப்பொழுது அவர் சின்னம்பேடு கிராமம், அய்யனார் மேடு பகுதியைச் சேர்ந்த தளபதி (வயது 30) என்று கூறினார்.

மேலும், அவரது பையில் வைத்திருந்த பொருட்களை சோதனை செய்தபோது அதில் சுமார் ஒரு கிலோ 200 கிராம் எடை கொண்ட கஞ்சாவை மறைத்து வைத்திருந்ததை கண்டுபிடித்தனர். பின்னர், அவரை போலீஸ் நிலையம் கொண்டு வந்து விசாரணை மேற்கொண்டனர். அப்பொழுது அவர் சுமார் ஏழு வழக்குகளில் தேடப்பட்டு வந்த குற்றவாளி என்பது தெரியவந்தது. இதையடுத்து அவர் மீது வழக்கு பதிவு செய்து பொன்னேரி முதல் நிலை குற்றவியல் நீதிமன்ற மாஜிஸ்ரேட் முன்னிலையில் ஆஜர் செய்து புழல் சிறையில் அடைத்தனர்.

மேலும் செய்திகள்