< Back
மாநில செய்திகள்
கஞ்சா கடத்திய வாலிபர் கைது
வேலூர்
மாநில செய்திகள்

கஞ்சா கடத்திய வாலிபர் கைது

தினத்தந்தி
|
5 Feb 2023 10:48 PM IST

பேரணாம்பட்டில் கஞ்சா கடத்திய வாலிபர் கைது செய்யப்பட்டார்.

பேரணாம்பட்டு டவுன் அரவட்லா ரோட்டில் பேரணாம்பட்டு போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் தேவபிரசாத், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ஆனந்தன், தனிப்பிரிவு ஏட்டு சாம் சந்திரசேகர் மற்றும் போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது மோட்டார்சைக்கிளில் வந்த ஒருவர் போலீசாரை கண்டவுடன் மோட்டார்சைக்கிளை விட்டுவிட்டு தப்பியோடினார். போலீசார் விடாமல் துரத்தி சென்று பங்களா மேடு வன ஓய்வு விடுதி அருகில் அந்த நபரை பிடித்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அவர் லாலா பேட்டை கிராமத்தை சேர்ந்த நல்லதம்பி (வயது 27) என்பதும், ஆந்திர மாநிலத்திலிருந்து 200 கிராம் கஞ்சாவை வாங்கி விற்பதற்காக கடத்தி வந்ததும்தெரிய வந்தது. அதனையடுத்து போலீசார் நல்லதம்பியை கைது செய்து, 200 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

மேலும் செய்திகள்