< Back
மாநில செய்திகள்
கஞ்சா கடத்திய வாலிபர் கைது
ராணிப்பேட்டை
மாநில செய்திகள்

கஞ்சா கடத்திய வாலிபர் கைது

தினத்தந்தி
|
16 Dec 2022 11:52 PM IST

அரக்கோணத்தில் கஞ்சா கடத்திய வாலிபர் கைது செய்யப்பட்டார்.

அரக்கோணம் ரெட்டை குளம் சோதனை சாவடியில் தாலுகா போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் சீனிவாசுலு தலைமையிலான போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் மோட்டார் சைக்கிளில் வந்த நபரை பிடித்து விசாரித்தனர். அதில் அவர் அரக்கோணம் அடுத்த வாணியம்பேட்டை பகுதியை சேர்ந்த அருண்குமார் (வயது 23) என்பது தெரிய வந்தது. தொடர்ந்து அவரை சோதனை செய்தபோது கஞ்சா வைத்திருந்து தெரியவந்து. இதனையடுத்து அவரை போலீசார் கைது செய்து, சுமார் 200 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

மேலும் செய்திகள்