< Back
மாநில செய்திகள்
நீலகிரி
மாநில செய்திகள்
கஞ்சா கடத்திய வாலிபர் கைது
|26 Aug 2022 8:13 PM IST
கர்நாடகாவில் இருந்து கஞ்சா கடத்திய வாலிபர் கைது செய்யப்பட்டார்.
கூடலூர்,
நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்தில் தமிழக-கர்நாடகா எல்லையான கக்கநல்லா சோதனை சாவடி உள்ளது. இந்த பகுதியில் கர்நாடகாவில் இருந்து கூடலூர் நோக்கி வந்த அரசு பஸ்சில் போலீசார் திடீர் சோதனை நடத்தினர். அப்போது சந்தேகப்படும்படி இருந்த ஒரு வாலிபரை பிடித்து விசாரித்தனர்.
மேலும் அவரை சோதனை செய்த போது, 200 கிராம் கஞ்சா கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து மசினகுடி போலீஸ் இன்ஸ்பெக்டர் திருமலை ராஜன் உள்ளிட்ட போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் மசினகுடி இந்திரா காலனியை சேர்ந்த வசந்த் (வயது 21) என்பவரை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்த கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர்.