< Back
மாநில செய்திகள்
சென்னை
மாநில செய்திகள்
பெரியமேட்டில் கஞ்சா விற்ற வாலிபர் கைது - 8 கிலோ கஞ்சா பறிமுதல்
|2 May 2023 8:49 AM IST
பெரியமேட்டில் கஞ்சா விற்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 8.5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.
சென்னை பெரியமேடு அல்லிக்குளம் இணைப்பு சாலையில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக பெரியமேடு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் அப்பகுதியை கண்காணித்த போது, அங்கு கஞ்சா விற்பனையில் ஈடுபட்டிருந்த வாலிபர் சிக்கினார். அவரிடம் இருந்து 8.5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.
விசாரணையில் அவர், நெற்குன்றம் பெருமாள் கோவில் தெருவை சேர்ந்த ஆகாஷ் (22) என்பது தெரிய வந்தது. பின்னர் அவர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்