< Back
மாநில செய்திகள்
கஞ்சா விற்ற வாலிபர் கைது
புதுக்கோட்டை
மாநில செய்திகள்

கஞ்சா விற்ற வாலிபர் கைது

தினத்தந்தி
|
5 Jun 2023 11:52 PM IST

கஞ்சா விற்ற வாலிபர் கைது செய்யப்பட்டார்.

கந்தர்வகோட்டை புதிய பஸ் நிலைய பகுதியில் கந்தர்வகோட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கேசவ மூர்த்தி மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு சந்தேகப்படும் படியாக நின்று கொண்டிருந்த ஒருவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர் கந்தர்வகோட்டை இந்திரா நகர் பகுதியை சேர்ந்த முனீஸ்வரன் (வயது 22) என்பதும், அவர் கஞ்சாவை பதுக்கி வைத்து விற்பனை செய்ததும் தெரியவந்தது.

மேலும் அவர் கந்தர்வகோட்டை பகுதியை சேர்ந்த கலைவாணன் என்பவரிடமிருந்து கஞ்சாவை வாங்கியதும் தெரியவந்தது.

இதையடுத்து முனீஸ்வரனை போலீசார் கைது செய்து, அவரிடமிருந்து 800 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்