< Back
மாநில செய்திகள்
கஞ்சா விற்ற வாலிபர் கைது
திருவள்ளூர்
மாநில செய்திகள்

கஞ்சா விற்ற வாலிபர் கைது

தினத்தந்தி
|
28 Sept 2022 2:05 PM IST

திருவள்ளூர் பகுதியில் உள்ள பள்ளி அருகே கஞ்சா விற்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

திருவள்ளூர் டவுன் இன்ஸ்பெக்டர் பத்மஸ்ரீ பபி மற்றும் போலீசார் நேற்று முன்தினம் திருவள்ளூர் பகுதியில் உள்ள பள்ளி அருகே ரோந்து பணி ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது அப்பள்ளியின் அருகில் உள்ள ஒரு பாழடைந்த கட்டத்தில் இருந்த நபர் ஒருவர் போலீசாரை கண்டதும் தான் வைத்திருந்த பையுடன் ஓட்டம் பிடித்தார். இதனால் சந்தேகம் கொண்ட போலீசார் அந்த நபரை விரட்டிச் சென்று பிடித்து விசாரித்தபோது, அவர் வைத்திருந்த பையில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட கஞ்சா பொருட்கள் ஒன்றரை கிலோ இருந்தது தெரியவந்தது. அவற்றைப் பறிமுதல் செய்த போலீசார், பள்ளியின் அருகே பாழடைந்த கட்டத்தில் கஞ்சா விற்றதாக திருவள்ளூர் பகுதியை சேர்ந்த கார்த்திக் (வயது 30) என்பவரை கைது செய்து அவரிடம் விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்