< Back
மாநில செய்திகள்
கள்ளக்குறிச்சி
மாநில செய்திகள்
கஞ்சா விற்ற வாலிபர் கைது
|16 Oct 2023 12:15 AM IST
திருக்கோவிலூர் அருகே கஞ்சா விற்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
திருக்கோவிலூர்
திருக்கோவிலூர் அருகே உள்ள சந்தைப்பேட்டை புறவழிச்சாலை பகுதியில் சப்- இன்ஸ்பெக்டர் ராஜசேகரன் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தார். அப்போது அங்கு சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்த சந்தைப்பேட்டை கனகநந்தல் ரோடு பகுதியை சேர்ந்த பச்சையப்பன் மகன் பாலாஜி(வயது 22) என்பவரை பிடித்து சோதனை செய்தபோது அவர் விற்பனைக்காக 50 கிராம் கஞ்சா வைத்திருந்ததை போலீசார் கண்டுபிடித்தனர். இதையடுத்து பாலாஜியை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்த கஞ்சாவை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.