< Back
மாநில செய்திகள்
கஞ்சா விற்ற வாலிபர் கைது
கோயம்புத்தூர்
மாநில செய்திகள்

கஞ்சா விற்ற வாலிபர் கைது

தினத்தந்தி
|
2 Oct 2023 12:30 AM IST

கஞ்சா விற்ற வாலிபர் கைது கைது செய்யப்பட்டார்.


கோவை ஒண்டிப்புதூரில் உள்ள பேக்கரி அருகே கஞ்சா விற்பனை நடைபெறுவதாக மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் அங்கு சென்று சோதனை நடத்தினர். அப்போது சந்தேகத்தின் பேரில், வாலிபர் ஒருவரை பிடித்து விசாரித்தனர். அதில் அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தார். அவரிடம் நடத்திய விசாரணையில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து ஒண்டிப்புதூர் வேட்டைக்கார சாமி கோவில் தெருவை சேர்ந்த ராஜசேகர் (வயது 30) என்பவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து 1 கிலோ 100 கிராம் கஞ்சா மற்றும் ஒரு செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது.


மேலும் செய்திகள்