< Back
மாநில செய்திகள்
குலசேகரத்தில் கஞ்சா வைத்திருந்த வாலிபர் கைது
கன்னியாகுமரி
மாநில செய்திகள்

குலசேகரத்தில் கஞ்சா வைத்திருந்த வாலிபர் கைது

தினத்தந்தி
|
31 Aug 2022 1:51 AM IST

குலசேகரத்தில் கஞ்சா வைத்திருந்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.

குலசேகரம்:

குலசேகரத்தில் கஞ்சா வைத்திருந்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.

குலசேகரம் போலீசார் நேற்று மாலை ரோந்து பணியில் ஈடுபட்டனர். அவர்கள் குலசேகரம் சந்தை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அங்கு சந்தேகப்படும் வகையில் கையில் பையுடன் நின்ற ஒரு வாலிபரை பிடித்து சோதனை செய்தனர். அப்போது, அந்த பையில் சிறு சிறு பொட்டலங்களாக மொத்தம் 1 கிேலா 200 கிராம் கஞ்சா இருந்தது ெதரியவந்தது. அதைதொடர்ந்து போலீசார் அந்த வாலிபரிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் குலசேகரம் அருகே வெண்டலிகோடு மெய்திருத்தி விளையைச் சேர்ந்தவர் மணி என்பவரது மகன் மோனிஷ் (வயது 25) என்பதும், பட்டதாரியான இவர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் கஞ்சாவை பறிமுதல் செய்து அவரை கைது செய்தனர்.

மேலும் செய்திகள்