< Back
மாநில செய்திகள்
கள்ளக்குறிச்சி
மாநில செய்திகள்
கஞ்சா வைத்திருந்த வாலிபா் கைது
|12 Oct 2023 12:15 AM IST
தியாகதுருகத்தில் கஞ்சா வைத்திருந்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
தியாகதுருகம்
தியாகதுருகம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மணிகண்டன் தலைமையிலான போலீசார் தியாகதுருகத்தில் இருந்து விருகாவூர் செல்லும் சாலையில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது மேம்பாலம் அருகே சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த மர்ம நபரை போலீசார் பிடித்து விசாரணை செய்தனர். விசாரணையில் அவர் தியாகதுருகம் அருகே புக்கிரவாரி கிராமத்தை சேர்ந்த ராமச்சந்திரன் மகன் கதிரவன்(வயது 23) என்பதும், விற்பனைக்காக சுமார் 50 கிராம் அளவில் கஞ்சா வைத்திருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்த கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர்.