< Back
மாநில செய்திகள்

திருவண்ணாமலை
மாநில செய்திகள்
கஞ்சா வைத்திருந்த வாலிபர் கைது

28 Sept 2023 6:35 PM IST
ஆரணி அருகே கஞ்சா வைத்திருந்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.
ஆரணி
ஆரணியை அடுத்த கைக்கிளாந்தான் தாங்கல் கிராமத்தைச் சேர்ந்தவர் அப்புனு என்ற ராஜ்குமார் (வயது 25). இவர் கஞ்சா விற்பனை செய்வதாக களம்பூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் ஜெய்சங்கர் மற்றும் போலீசார் அங்கு சென்று அவரை சோதனை செய்தனர்.
அப்போது அவரிடம் 20 கிராம் கஞ்சா இருந்தது. அதனை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.