< Back
மாநில செய்திகள்
கஞ்சா வைத்திருந்த வாலிபர் கைது
திருநெல்வேலி
மாநில செய்திகள்

கஞ்சா வைத்திருந்த வாலிபர் கைது

தினத்தந்தி
|
2 Aug 2023 12:50 AM IST

நெல்லை மேலப்பாளையத்தில் கஞ்சா வைத்திருந்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

நெல்லை மேலப்பாளையம் போலீசார் நேற்று முன்தினம் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது கன்னிமார்குளம் ஹாமீன்புரம் பகுதியில் சந்தேகப்படும் படியாக நின்றுக்கொண்டு இருந்த நபரை பிடித்து விசாரணை நடத்தினர். அதில் அவர் மேலப்பாளையம் சிவராஜபுரத்தை சேர்ந்த ராசப்பா (வயது 32) என்பதும், கஞ்சா வைத்திருந்ததும் தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் அவரை கைது செய்து, 100 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

மேலும் செய்திகள்