< Back
மாநில செய்திகள்

சென்னை
மாநில செய்திகள்
கஞ்சா விற்பதற்காக 17 வயது சிறுவனை கடத்திய வாலிபர் கைது

2 April 2023 2:39 PM IST
கஞ்சா விற்பதற்காக 17 வயது சிறுவனை கடத்திய வாலிபரை போலீசார் கைது செய்தனர்,
சென்னை அயனாவரம் குன்னூர் நெடுஞ்சாலையைச் சேர்ந்த பெண் ஒருவர், தனது 17 வயது மகனை சிலர் அடித்து உதைத்து கடத்திச் சென்றதாக அயனாவரம் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில், பழைய குற்றவாளியான கொரட்டூரை சேர்ந்த சத்யா (வயது 23) என்பவர்தான் தனது கூட்டாளியான ஓட்டேரியைச் சேர்ந்த பூபதி (19) என்பவருடன் சேர்ந்து சிறுவனை அடித்து கடத்திச் சென்றது தெரிய வந்தது. சத்யாவை போலீசார் கைது செய்தனர்.
அவரிடம் நடத்திய விசாரணையில் கஞ்சா விற்பதற்கும், மோட்டார் சைக்கிளை திருடி தரவும் சிறுவனை அடித்து உதைத்து கடத்திச்சென்றது தெரிந்தது. சிறுவனை மீட்ட போலீசார், தலைமறைவான பூபதியை தேடி வருகின்றனர்.