< Back
மாநில செய்திகள்
கோயம்புத்தூர்
மாநில செய்திகள்
தாயை தாக்கிய வாலிபர் கைது
|2 Oct 2023 1:15 AM IST
தாயை தாக்கிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.
கோவை தெற்கு உக்கடம் புல்லுக்காடு ஹவுசிங் யூனிட்டை சேர்ந்தவர் தவ்லத் நிஷா (வயது 47). இவருக்கு 2 மகள்கள் மற்றும் 4 மகன்கள் உள்ளனர். இவரது மூத்த மகன் அசாருதீன் (27). இவர் சரிவர வேலைக்கு செல்லாமல் இருந்து வந்ததாக தெரிகிறது. இதனை தாய் தவ்லத் நிஷா கண்டித்து வந்தார். இது தொடர்பாக அவர்களுக்கிடையே அடிக்கடி தகராறு இருந்து வந்தது. சம்பவத்தன்று மீண்டும் அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த அசாருதீன் தகாத வார்த்தைகளால் பேசி தவ்லத் நிஷாவை தாக்கியதாக தெரிகிறது. இது குறித்து அவர் கடைவீதி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அசாருதீனை கைது செய்தனர்.